பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
யூனியன் பிரதேசங்களில் பழங்குடியினருக்கான நன்மைகள்
प्रविष्टि तिथि:
30 JUL 2026 1:45PM by PIB Chennai
மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பழங்குடியினர் விவகாரத்துறை இணை அமைச்சர் திரு. துர்காதாஸ் உய்கே, 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி யூனியன் பிரதேசங்களில் பழங்குடியின மக்கள் தொகை விவரங்களைத் தெரிவித்தார்.
அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிடப்பட்ட பின்னரே, பழங்குடியின மக்கள் தொகை குறித்த சமீபத்திய கணக்கெடுப்பு விவரங்கள் கிடைக்கும் என்று அவர் கூறினார்.
பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் பழங்குடியினரின் நலன் மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சியை அரசு தொடர்ந்து ஆதரித்து வருகிறது. கல்வி ஆதரவிற்கான பள்ளிக்கு முந்தைய மற்றும் பிந்தைய கல்வி உதவித்தொகை, உயர்கல்விக்கான தேசிய கல்வி உதவித்தொகை, தேசிய உதவித்தொகை மற்றும் தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதார முயற்சிகளுக்காக தன்னார்வ அமைப்புகளுக்கு மானிய உதவி வழங்கப்படுகிறது. நிலையான வாழ்வாதாரம், தொழில்முனைவு மற்றும் சலுகை விகிதத்திலான கடன் வசதியை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், சுகாதாரம், கல்வி, குடிநீர், போக்குவரத்து இணைப்பு மற்றும் பிற உள்கட்டமைப்பு தொடர்பான நடவடிக்கைகள், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291617®=3&lang=1
***
TV/PKV/SH
(रिलीज़ आईडी: 2291691)
आगंतुक पटल : 9