பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் முன்னேற்றம்

प्रविष्टि तिथि: 30 JUL 2026 1:32PM by PIB Chennai

மக்களவையில் இன்று (30.07.2026) ஒரு கேள்விக்கு பதிலளித்த பழங்குடியினர் விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கி, 18 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் 75 மிகவும் நலிவடைந்த பழங்குடியின சமூகங்களின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்காக, செயல்படுத்தப்படும் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான பிரதமரின் பெருந்திட்டமான ஜன்மன் திட்டம் குறித்து எடுத்துரைத்தார்.

 

இத்திட்டம் பிரதமரால் 2023 நவம்பர் 15 அன்று தொடங்கப்பட்டது. பாதுகாப்பான வீட்டுவசதி, சுத்தமான குடிநீர், கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்துக்கான மேம்பட்ட அணுகல், சாலை, தொலைத்தொடர்பு இணைப்பு, மின்சார வசதியற்ற வீடுகளுக்கு மின் இணைப்பு, நிலையான வாழ்வாதார வாய்ப்புகள் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குவதன் மூலம் அவர்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்த நோக்கங்கள் 9 துறை அமைச்சகங்களால் செயல்படுத்தப்படும் 11 அம்ச திட்டங்கள் மூலம் நிறைவேற்றப்படுகின்றன.

 

பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் (30.06.2026 அன்றுள்ள நிலவரப்படி)

 

தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 13066 வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதில் 9541 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

 

தமிழ்நாட்டில் இந்த திட்டத்தின் கீழ் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் இணைப்புகளுக்காக 1537 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டன.

அதில் 1387 கிராமங்களில் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

 

தமிழ்நாட்டில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்கள் 1742 என மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் 367651 பழங்குடியின மக்கள் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291604&reg=3&lang=1

(Release ID : 2291604)

***

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2291684) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Bengali-TR