பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு முகமையின் கீழ் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகள்

प्रविष्टि तिथि: 30 JUL 2026 1:30PM by PIB Chennai

ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு முகமையின் கீழ் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து மத்திய அமைச்சர் திரு ஜுவல் ஓரம் இன்று நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

 

மத்திய அரசு, பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம், பிற துறைசார் அமைச்சகங்களின் பல்வேறு திட்டங்கள் மூலம் பழங்குடியினர் மேம்பாட்டு முகமை பல்வேறு பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துகிறது. அரசியலமைப்பின் 275(1) பிரிவின் கீழ் வழங்கப்படும் மானியங்கள், பிரதமரின் ஆதி ஆதர்ஷ் கிராம யோஜனாபழங்குடியினர் துணைத் திட்ட ஆதரவு, பிரதமரின் ஜன்மன், ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள், கல்வி உதவித்தொகை திட்டங்கள், பழங்குடியினர் வாழ்வாதார திட்டங்கள் உள்ளிட்டவற்றின் கீழ் உதவிகள் வழங்கப்படுகிறது. கல்வி, சுகாதாரம், விவசாயம், உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் உள்ள முக்கிய இடைவெளிகளை நிரப்புவதற்காக 275(1) பிரிவின் கீழ் மானியங்கள் வழங்கப்படுகின்றன. இந்தத் தலையீடுகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்கான முக்கிய கள அளவிலான நிறுவனங்களாக பழங்குடியினர் மேம்பாட்டு முகமைகள்/பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுகின்றன.

 

மேற்கூறிய திட்டங்களின் கீழ் உள்ள நிதிகள், ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக அல்லாமல், பொதுவாக மாநில வாரியாகவும் திட்ட வாரியாகவும் ஒதுக்கப்பட்டு விடுவிக்கப்படுகின்றன.

 

பிரதமரின் ஆதி ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 167 கிராமங்கள் உள்ளன. இவற்றில் 157 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 2025-26-ம் நிதியாண்டுக்கு இந்த கிராமங்களுக்கு விடுவிக்கப்பட்ட நிதி 6.6244 கோடி ரூபாயாகும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291603&reg=3&lang=1

Release ID : 2291603

***

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2291681) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Bengali-TR