எஃகுத்துறை அமைச்சகம்
மாங்கனீசு தாது உற்பத்தி நிறுவனத்தின் நிகர லாபம் 70 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது
प्रविष्टि तिथि:
30 JUL 2026 1:41PM by PIB Chennai
மாங்கனீசு தாது உற்பத்தி நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு 2026-27-ம் நிதியாண்டில் முதல் காலாண்டிற்கான நிதி மற்றும் செயல்பாட்டு முடிவுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிறுவனத்தின் உற்பத்தி, விற்பனை, நிகர லாபம் ஆகியவற்றில் சீரான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் ஈட்டப்பட்டுள்ள வருவாய் ரூ. 348.06 கோடியிலிருந்து ரூ. 370.88 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7 சதவீம் அதிகமாகும். இந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.370.52 கோடியிலிருந்து ரூ.391.13 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் கூடுதலாகும்.
இந்த நிதியாண்டில் முதலாவது காலாண்டில் ஈட்டப்பட்டுள்ள நிகர லாபம் (வரிக்குப்பிந்தைய) 70 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் நிகர விற்பனை வருவாய் முந்தைய ஆண்டின் இதேகால ஆண்டில் இருந்த ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ. 8,884 என்ற அளவில் இருந்து 10 சதவீதம் அதிகரித்து மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ. 9,749 ஆக அதிகரித்துள்ளது.
மாங்கனீசு தாது உற்பத்தி 5 லட்சத்து 7 ஆயிரத்து 605 மெட்ரிக் டன்னாக இது உள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதேகாலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 1 சதவீதம் கூடுதலாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291611®=3&lang=1
***
TV/SV/RJ/SH
(रिलीज़ आईडी: 2291666)
आगंतुक पटल : 13