மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டில் உள்ள பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையில் உயர்வு

प्रविष्टि तिथि: 29 JUL 2026 6:19PM by PIB Chennai

ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறை அறிக்கையின்படி (UDISE+), தொடக்க நிலை முதல் இடைநிலைக் கல்வி நிலை வரை நாட்டில் பணியில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை 2023-24 முதல் 2025-26 வரை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை 2023-24-ல் 9155644 ஆகவும், 2024-25-ல் 9438291 ஆகவும், 2025-26-ல் 9574324 ஆகவும் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 503639 (2023-24) முதல், 487863 (2024-25) ஆக உயர்ந்து,  504353 (2025-26) ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் 2023-24-ல் 11688 ஆகவும், 2024-25-ல் 12132 ஆகவும், 2025-26-ல் 12593 ஆகவும் பதிவாகியுள்ளது.

 

இதேபோல, கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டில் உள்ள மொத்த பள்ளிகளின் எண்ணிக்கையும் பெருவாரியாக அதிகரித்துள்ளது. ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறை அறிக்கையின்படி, 2023-24-ல் 1471891 ஆக இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை, 2024-25-ல் 1471473 ஆகவும், 2025-26-ல்  1466682 ஆகவும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 2023-24-ல் 58722 பள்ளிகள் இருந்த நிலையில்,  2024-25-ல் 57935 ஆகவும், 2025-26-ல் 57566 ஆகவும் பதிவானது. புதுச்சேரியில் இந்த எண்ணிக்கை முறையே 735, 763  மற்றும் 770  ஆக  உயர்ந்துள்ளது.

 

மத்திய கல்வித் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி, இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291272&reg=3&lang=1

***

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2291596) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी