சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
பசுமை நெடுஞ்சாலைத் திட்டங்கள்
प्रविष्टि तिथि:
29 JUL 2026 5:48PM by PIB Chennai
பசுமை நெடுஞ்சாலைகள் (மரம் நடுதல், மரம் இடமாற்றம் செய்தல், அழகுபடுத்துதல் மற்றும் பராமரிப்பு) கொள்கை 2015-இன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளை பசுமை நெடுஞ்சாலைகளாக மாற்றும் நோக்கத்துடன், கடந்த ஐந்து ஆண்டுகளில், நாட்டில் சுமார் 1.32 லட்சம் கிலோமீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 3.61 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
மரம் நடுதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான செலவுகள் பொதுவாக அந்தந்த தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் மொத்தச் செலவில் அடங்கியுள்ளன. மேலும், தேசிய நெடுஞ்சாலைகளின் மேம்பாடு மற்றும் பராமரிப்பிற்காக மாநிலம், யூனியன் பிரதேசம் அல்லது முகமை வாரியாக ஒதுக்கப்படும் ஒட்டுமொத்த நிதியிலிருந்தே இதற்கான செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேவேளையில், மரம் நடும் பணிகள் தனிப்பட்ட திட்டங்களாக மேற்கொள்ளப்படும்போதும், அதற்கான செலவுகள் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த நிதியிலிருந்தே ஈடுசெய்யப்படுகின்றன.
நிதியாண்டு 2021-22-ல் தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் 2.91 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த எண்ணிக்கை 2022-23-ல் 2.81 லட்சமாகவும், 2023-24-ல் 2.72 லட்சமாகவும், 2024-25-ல் 4.51 லட்சமாகவும், 2025-26-ல் 3.40 லட்சமாகவும் பதிவாகியுள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291229®=3&lang=1
***
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2291591)
आगंतुक पटल : 11