மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்தை வலுப்படுத்தும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
29 JUL 2026 4:50PM by PIB Chennai
பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, நாடு முழுவதும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) சேவையை மத்திய அரசு ஊக்குவித்துள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், வெளிப்படையான, இயங்கக்கூடிய மற்றும் தேவைக்கேற்ப விரிவுபடுத்தக்கூடிய தளங்கள் வாயிலாக, பெருமளவிலான மக்களுக்கு டிஜிட்டல் சேவைகளை வழங்குவதை சாத்தியமாக்க டிபிஐ அணுகுமுறையை அரசு கையாண்டுள்ளது.
ஆதார், ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (யுபிஐ), டிஜிலாக்கர், நேரடிப் பலன் பரிவர்த்தனைப் பரிமாற்றம் (DBT), உமங், பொதுச் சேவை மையங்கள், மின்னணு கையெழுத்துகள் போன்ற முக்கிய டிஜிட்டல் முன்முயற்சிகள், அரசு சேவைகள், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள், டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் நேரடிப் பணப்பரிவர்த்தனைக்கான தடையற்ற அணுகலை சாத்தியமாக்கியுள்ளன.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைப் பொறுத்தவரை, உமாங் தளத்தில் முறையே 17 மற்றும் 23 சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. டிஜிலாக்கரில் 21847515 மற்றும் 427921 ஆதார் சார்ந்த பதிவுகள் ஏற்பட்டுள்ளதுடன், மொத்தம் 160 (தமிழ்நாடு) மற்றும் 15 (புதுச்சேரி) துறைகள்/நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதேபோல 127047142 (தமிழ்நாடு) மற்றும் 2291385 (புதுச்சேரி) மின்னணு கையெழுத்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா மக்களவையில் இன்று இந்தத் தகவலை சமர்ப்பித்தார்
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291148®=3&lang=1
***
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2291577)
வருகையாளர் எண்ணிக்கை : 40