விண்வெளித்துறை
azadi ka amrit mahotsav

விண்வெளித் துறையில் தனியார் துறை பங்கேற்பு

प्रविष्टि तिथि: 29 JUL 2026 4:04PM by PIB Chennai

இன்-ஸ்பேஸ் அமைப்பால் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்க மதிப்பீடு குறித்த முதற்கட்டக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், 2026-ம் ஆண்டில், மொத்தம் 187 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் அமைத்தல் மற்றும் இயக்குதல், விண்வெளி போக்குவரத்து அமைப்புகளை ஏவுதல் உள்ளிட்ட பல்வேறு விண்வெளி நடவடிக்கைகளுக்காக, அரசு சாரா நிறுவனங்களுக்கு இதுவரை மொத்தம் 108 அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

தனியார் நிறுவனங்களின் விண்வெளி நடவடிக்கைகளை அனுமதிக்கும் அதே வேளையில், பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் அனுமதி விண்ணப்பங்களை மதிப்பீடு செய்வதை இன்ஸ்பேசின்  "விண்வெளி நடவடிக்கைகளுக்கான அனுமதி தொடர்பான இந்திய விண்வெளி கொள்கை-2023-ஐ செயல்படுத்துவதற்கான விதிமுறைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகள் " ஆவணம் வகை செய்கிறது. மேலும், பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து, இந்திய நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் விண்வெளி நடவடிக்கைகளுக்கான "பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை" உருவாக்கும் பணியிலும் இன்-ஸ்பேஸ் ஈடுபட்டுள்ளது.

விண்வெளித் துறை சார்ந்த புத்தொழில் நிறுவனங்களை ஆதரிப்பதற்காக இந்திய அரசு பல்வேறு முயற்சிகளையும் திட்டங்களையும் மேற்கொண்டுள்ளது.

இத்தகவலை, பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291077&reg=3&lang=1

 

***

TV/PKV/SH


(रिलीज़ आईडी: 2291567) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी