திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
ஐடிஐ-க்களை மேம்படுத்துவதன் மூலம் பிரதமரின் திறன் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
29 JUL 2026 4:18PM by PIB Chennai
மேம்படுத்தப்பட்ட தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மூலம் பிரதமரின் திறன் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம், மேம்பட்ட ஆய்வகங்கள், இயந்திரங்கள் மற்றும் தொழில்துறைக்கேற்ப பாடத்திட்டங்கள் மூலம் நாட்டில் தொழிற்பயிற்சியின் ஒட்டுமொத்த தரம், தேவையை மேம்படுத்துவதே நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொழிற்பயிற்சி நிறுவனங்கள், தேசிய திறன்பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றின் பயிற்சி அளிக்கும் முறையின் தரத்தை மேம்படுத்துதல், தொழில்துறை தரநிலைகளுக்கேற்ப உள்கட்டமைப்பு, உபகரணங்களை நவீனமயமாக்குதல், தொழில்துறைக்கேற்ற நீண்டகால, குறுகியகால பாடமுறைகளை அறிமுகப்படுத்துதல், தேவையுடைய திறன் மேம்பாடு, சிறந்த வேலைவாய்ப்புக்காக தொழில்துறையினருடனான தொடர்பை வலுப்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291100®=3&lang=1
***
TV/IR/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2291564)
வருகையாளர் எண்ணிக்கை : 25