உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நீதித்துறைச் செயல்பாட்டில் விரைவு, திறன், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது

प्रविष्टि तिथि: 29 JUL 2026 3:38PM by PIB Chennai

நீதித்துறைச் செயல்பாட்டில் விரைவு, திறன், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை பெருமளவில் மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குற்றம் மற்றும் குற்றவாளிகளைக் கண்காணிக்கும் கட்டமைப்பு மற்றும் அமைப்பு செயலியானது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது முதல் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்வது வரையிலான காவல்துறையின் செயல்பாடுகளை கணினிமயமாக்க உதவுகிறது. இந்தச் செயலி விசாரணையைக் கண்காணிக்கவும் குற்றப்பதிவுகளை நிர்வகிக்கவும் குடிமக்களுக்கான சேவைகளை எளிதாக்கவும் வகைசெய்கிறது. 

விசாரணை அதிகாரிகள் உரிய நேரத்தில் நடைமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்ய  நீதிச்சட்ட விதிமுறைகளின்படி, காலமுறை அடிப்படையிலான எச்சரிக்கைகள் இந்தச் செயலியில் இடம் பெற்றுள்ளன.

காவல்துறை, நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், தடய அறிவியல் துறை ஆகியவை தடையின்றி பரிமாறிக் கொள்ள வசதியாக ஒருங்கிணைந்த குற்றவியல், நீதி அமைப்புத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது முதல் தகவல் அறிக்கைகள், குற்றப் பத்திரிகைகள், நீதிமன்ற உத்தரவுகள், தடய அறிவியல் அறிக்கைகள், சிறைச்சாலைத் தரவு உள்ளிட்ட பதிவுகளை மின்னணு முறையில் அனுப்புவதை எளிதாக்குகிறது. இதன் மூலம் தாமதங்களைக் குறைந்து நீதி வழங்கும் அமைப்பு முழுவதும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துகிறது.

இத்தகவலை மத்திய உள்துறை இணையமைச்சர், திரு பண்டி சஞ்சய் குமார் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291038&reg=3&lang=1

****

TV/IR/KPG/SH

 


(रिलीज़ आईडी: 2291409) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu