கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டம்

प्रविष्टि तिथि: 28 JUL 2026 5:14PM by PIB Chennai

கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் கிடங்குகளைக் கட்டுவதற்காக 1,015 தொடக்க வேளாண்மைக்  கூட்டுறவுச் சங்கங்கள் (PACS) அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 313 சங்கங்களில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, மொத்தம் 1.80 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டில் 5 கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன.

இந்தத் திட்டம் இந்திய உணவுக் கழகத்தின்சேமிப்புத் தேவைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 216 இடங்களில், சுமார் 26.03 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான சேமிப்புத் தேவையை இந்திய உணவுக் கழகம் அடையாளம் கண்டுள்ளது. 2,500 மெட்ரிக் டன் அல்லது அதற்கு மேற்பட்ட கொள்ளளவு கொண்ட கிடங்குகளை (வடகிழக்கு மற்றும் மலைப்பாங்கான பகுதிகளுக்கு 1,671 மெட்ரிக் டன் மற்றும் அதற்கு மேல்), 9 ஆண்டுகளுக்குச் சீரான வாடகைக்கு எடுப்பதற்கான உத்தரவாதத்தை இந்திய உணவுக் கழகம் வழங்கியுள்ளது.

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290531&reg=3&lang=1

 

***

TV/BR/KR

 


(रिलीज़ आईडी: 2291016) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी