மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீடு

प्रविष्टि तिथि: 28 JUL 2026 3:54PM by PIB Chennai

மத்திய மீன்வளத் துறை 2020-21 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில், தமிழ்நாட்டில் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த மொத்தம் ரூ.1,240.5778 கோடி மதிப்பிலான நிர்வாக ஒப்புதலை வழங்கியது. இதில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.480.0906 கோடியும், மாநில அரசின் பங்களிப்பாக ரூ.455.6139 கோடியும், பயனாளிகளின் பங்களிப்பாக ரூ.272.8488 கோடியும் (பயனாளிகள் சார்ந்த / பயனாளிகள் சாராத அம்சங்கள் உட்பட) அடங்கும். ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்ட மதிப்பீடு என்பது, முழுமையான  திட்டக் காலத்திற்குமான மொத்த நிதி ஒதுக்கீட்டைக் குறிக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் (2023-24 முதல் 2025-26 வரை) இந்தத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு விடுவிக்கபட்டுள்ள  மத்திய அரசின் நிதியுதவி தொடர்பான விவரங்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் விடுவிக்கப்பட்ட நிதி குறித்த விவரங்கள் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.

மானியத் தொகைகள் மின்னணு தீர்வுச் சேவை மூலம், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படுகின்றன.

பிரத்யேகப் பொருளாதார மண்டலத்தில், ஆழ்கடல் மீன்பிடித்தலை ஊக்குவிப்பதற்காக, 2015-2020 காலகட்டத்தில் செயல்படுத்தப்பட்ட 'நீலப் புரட்சி' என்ற மத்திய நிதியுதவித் திட்டத்தின் கீழ், ஆழ் கடல் மீன்பிடித்தல் நடவடிக்கைகளுக்கான உதவி, மீன்பிடி இழுவை படகுகளை குறிப்பிட்ட வளங்களை இலக்காகக் கொண்ட ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளாக மாற்றுதல் ஆகிய அம்சங்களை மத்திய அரசின் மீன்வளத் துறை தமிழ்நாடு உள்ளிட்ட கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஆழ்கடல் மீன்பிடித்தலை ஊக்குவிப்பதற்காகவும், பாரம்பரிய மீனவர்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காகவும், அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு 4,500 எந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளுக்கு ஆண்டொன்றுக்கு ஒரு படகிற்கு 19,000 லிட்டர் வீதமும்,  13,500 எந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளுக்கு ஆண்டொன்றுக்கு ஒரு படகிற்கு 4,400 லிட்டர் வீதமும் விற்பனை வரி விலக்கு அளிக்கப்பட்ட டீசல், 7,500 எந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளுக்கு ஆண்டுக்கு ஒரு படகிற்கு 3,700 லிட்டர் வீதம் மானிய விலையில் தொழிற்துறை மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.

மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290415&reg=3&lang=1

 

***

TV/BR/KR

 


(रिलीज़ आईडी: 2291014) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी