வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியாவின் பொம்மை ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, உள்நாட்டு உற்பத்தியில் வலுவான வளர்ச்சியைப் பிரதிபலிப்பதாக உள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
28 JUL 2026 4:14PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில், ஜூலை 4 முதல் 7 வரை இந்த பொம்மைகள் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் சார்பில்,17-வது பொம்மை வர்த்தகத்திற்கான சர்வதேச கண்காட்சி நடத்தப்பட்டது.
இந்தியாவில், பொம்மை உற்பத்தியை ஊக்குவித்தல், வர்த்தகத் தொடர்புகளை எளிதாக்குதல், உள்நாட்டு விற்பனை, ஏற்றுமதியில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற அம்சங்களை நோக்கமாகக் கொண்டு இந்த கண்காட்சி நடைபெற்றது.
இதில் 400 இந்தியப் பொம்மை நிறுவனங்கள், 40 நாடுகளைச் சேர்ந்த 100 சர்வதேச வாங்குநர்கள், 30,000 வர்த்தகப் பார்வையாளர்கள் பங்கேற்றனர். உற்பத்தியாளர்களுடன் மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், நிறுவன ரீதியான வாங்குநர்கள் ஆகியோரை மின்னணு வர்த்தகத் தளங்களுடன் இணைப்பதற்கான ஒரு தளத்தை இக்கண்காட்சி வழங்கியது.
தற்போது, பொம்மைகள் உற்பத்திக்கான பிரத்யேகக் கொள்கை எதுவும் மத்திய அரசிடம் இல்லை.
2018-19-ம் ஆண்டில், 371.7 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொம்மைகளை இந்தியா இறக்குமதி செய்தது. இவற்றில் பெரும்பகுதி பொம்மைகள், பாதுகாப்பு இல்லாதவையாகவும், தரமற்றவையாகவும், போலியானதாகவும், குறைவான விலை கொண்டதாகவும் இருந்தன.
மேலும், 2019-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்யப்படும் பொம்மைகளில், 33% மட்டுமே இந்திய தரநிலை அமைவனத்தின் தரநிலைகளின்படி ஏற்றுக்கொள்ளக்கூடிய தரத்தில் இருந்தது தெரிய வந்தது.
அரசின் முன்முயற்சிகள் காரணமாக பொம்மை உற்பத்தியில், இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டு வருகிறது. 2025-ம் ஆண்டில் நடத்தப்பட்ட தரநிலை ஆய்வின்படி, 95% பொம்மை மாதிரிகள் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்க இருப்பது கண்டறியப்பட்டது.
இது இந்தியச் சந்தையில் கிடைக்கும் பொம்மைகளின் தரத்தில் ஏற்பட்டுள்ள கணிசமான முன்னேற்றத்தை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
மக்களவையில் இன்று மத்திய வர்த்தகத் துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290441®=3&lang=1
(Release ID: 2290441)
****
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2290859)
வருகையாளர் எண்ணிக்கை : 33