உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய ஆயுதக் காவல் படைக்குக் காதிப் பொருட்கள் கொள்முதல்

प्रविष्टि तिथि: 28 JUL 2026 3:19PM by PIB Chennai

சுதேசி மற்றும் காதிப் பொருட்களின் கொள்முதலையும் அன்றாடப் பயன்பாட்டையும் ஊக்குவிக்கும் பொருட்டு, காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், 2020 மார்ச் 13 முதல் மத்திய காவல்துறை நல அங்காடியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திசையில் பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன:-

காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்திடம்  இருந்து மத்திய ஆயுதக் காவல் படைகள்  கொள்முதல் செய்ய, (i) கடுகு எண்ணெய், (ii) பருத்திப் படுக்கை விரிப்புகள், (iii) கம்பளிப் போர்வை (iv) படுக்கை விரிப்பு மற்றும் தலையணை உறை ஆகிய நான்கு பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கடுகு எண்ணெய் மற்றும் படுக்கை விரிப்புகளைக் கொள்முதல் செய்ய இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை ஒருங்கிணைப்புப் படை ஆகும். போர்வைகளைக் கொள்முதல் செய்ய மத்திய ரிசர்வ் ல் படை ஒருங்கிணைப்புப் படை ஆகும். படுக்கை விரிப்பு மற்றும் தலையணை உறைகளைக் கொள்முதல் செய்வதற்கு மத்திய ஆயுதக் காவல் படைகளின் கூடுதல் தலைமை இயக்குநர் (மருத்துவம்) ஒருங்கிணைப்பு அதிகாரி ஆவார்.

நாடு முழுவதும் உள்ள மத்திய ஆயுதக் காவல் படைகளில் பணிபுரிகின்ற மற்றும் ஓய்வுபெற்ற வீரர்களின் நலனுக்காக, சுதேசி மற்றும் காதிப் பொருட்கள், மத்திய காவல்துறை நல அங்காடியின் முதன்மை மற்றும் துணை அங்காடிகள் மூலமாகவும் விற்கப்படுகின்றன.

அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களை மத்திய ஆயுதக் காவல் படைகள் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்திடமிருந்து கொள்முதல் செய்கின்றன.

தேசிய தேனீ வாரியம், அறிவியல் பூர்வமான தேனீ வளர்ப்பிற்காக அனைத்துப் படைகளுக்கும் தேவையான உதவியையும் பயிற்சியையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. தேன் உற்பத்திக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்காக, மத்திய ஆயுதக் காவல் படைகளின் வளாகத்திற்குள் அதிக பூச்செடிகளை நட்டு தோட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தேனீ வளர்ப்பு மூலம் உற்பத்தி செய்யப்படும் தேன், வீரர்களின் ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துவதற்காக அவர்களுக்கு உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய உள்துறை அமைச்சக இணைமையமைச்சர் திரு நித்யானந்த ராய் இத்தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290371&reg=3&lang=1

****

TV/SMB/SH


(रिलीज़ आईडी: 2290819) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी