உள்துறை அமைச்சகம்
நீதியை மையமாகக் கொண்ட அமைப்பு
प्रविष्टि तिथि:
28 JUL 2026 3:14PM by PIB Chennai
புதிய சட்டங்கள், குடிமக்களை மையமாகக் கொண்ட, எளிதில் பயனடையக் கூடிய, திறன் வாய்ந்த நீதி அமைப்பை உருவாக்குவதில், ஒரு குறிப்பிடத்தக்க நிலை எட்டப்பட்டுள்ளதைக் குறிக்கின்றன. தண்டனை அளிப்பதைக் காட்டிலும், நீதி கிடைப்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த புதிய சட்டங்களில் முக்கிய விதிகள் இடம் பெற்றுள்ளன.
2023-ம் ஆண்டின் இந்திய நீதிச் சட்டத்தில், சிறார் பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு மரண தண்டனை வரை கொடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிறார் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும்.
பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட விதிகள், வழக்குகளில் விரைவான, நேர்மையான தீர்வு கிடைப்பதற்கு ஏதுவாக காலக்கெடுவை வரையறை செய்வது போன்ற அம்சங்களும் கருத்தில் கொண்டு சட்ட விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சிறார் மீதான குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு சமூக பங்களிப்பிற்கான வாய்ப்புக்களை வழங்குவதற்கான புதிய விதிகளை அறிமுகம் செய்வது போன்ற சீர்திருத்த அணுகுமுறை, குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமைகள், வழக்கு விசாரணைக்காக குற்றம் சாட்டப்பட்டவர் இல்லாத நிலையில் விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு தீர்ப்பு வழங்குவதற்கான நடைமுறைகள் இந்த புதிய சட்டங்களில் இடம் பெற்றுள்ள பிற அம்சங்களாகும்.
மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், மத்திய உள்துறை இணையமைச்சர் திரு. பண்டி சஞ்சய் குமார் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290363®=3&lang=1
(Release ID: 2290363)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2290692)
आगंतुक पटल : 11