ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தறிகள், உபகரணங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது

प्रविष्टि तिथि: 28 JUL 2026 2:16PM by PIB Chennai

தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மேம்படுத்தப்பட்ட தறிகள், உபகரணங்கள், பணிக்கூடங்களை அமைத்தல், தயாரிப்பு, வடிவமைப்பு மேம்பாடு ஆகிய பல்வேறு நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியுதவி அளிக்கப்படுகிறது. கைத்தறி நெசவாளர்களை தொழில்முறை ரீதியாக நிர்வகிக்கப்படும்  மற்றும் உறுப்பினர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களாக ஒருங்கிணைப்பதற்கான முக்கிய நிறுவன அமைப்பாக கைத்தறி உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்குதையும் வலுப்படுத்துவதையும் மத்திய அரசு ஊக்குவிக்கிறது. தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2020-21 முதல் 2025-26 வரை 237 கைத்தறி உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள கைத்தறித் துறைக்குத் தேவையான கடன் தேவைகளை குறைவான செலவில் பெறுவதற்கு வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து உரிய நேரத்தில் உதவிகளைப் பெற்றுத்தர சலுகைக்கடன், நெசவாளர் முத்ரா திட்டம் ஒரு பகுதியாகச் செயல்படுத்தப்படுகிறது.

தனிப்பட்ட கைத்தறி நெசவாளர் அல்லது நெசவாளர் தொழில்முனைவோருக்கு கடன் தொகையில் 20 சதவீதம் (அதிகபட்சம் ரூ.25,000) வரம்பிற்குட்பட்டும்  கைத்தறி நிறுவனங்களுக்கு கடன் தொகையில் 20 சதவீதம் (அதிகபட்சம் 20 லட்சம் வரை அதாவது ஒவவொரு 100 நெசவாளர்கள் / பணியாளர்களுக்கு ரூ.2 லட்சம்) வரம்பிற்குட்பட்டும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த 3 ஆண்டுகளில் 48,891 கைத்தறிகளும் உபகரணங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன. 4,216 தனிநபர் பணிக்கூடங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 5,466 கைத்தறிகளும், 581 தனிநபர் பணிக்கூடங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இத்தகவலை மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கரிட்டா மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290320&reg=3&lang=1  

***

TV/IR/KPG/KR

 


(रिलीज़ आईडी: 2290500) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी