ஜவுளித்துறை அமைச்சகம்
உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், ஜவுளித் துறையில், நாடு முழுவதும் 170 நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
28 JUL 2026 2:12PM by PIB Chennai
செயற்கை இழை ஆடைகள், செயற்கை இழை துணிகள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, ஜவுளி அமைச்சகத்தால் நாடு முழுவதும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம், முதலீட்டை ஊக்குவித்தல், உற்பத்தித் திறன்களை மேம்படுத்துதல், ஜவுளித் துறையின் போட்டித்திறனை அதிகரித்தல், அடையாளம் காணப்பட்ட தயாரிப்புப் பிரிவுகளில் மதிப்புக் கூட்டலை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் செயலாக்கம், அமைச்சகத்தின் பல்வேறு மட்டங்களில் அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் செயலாக்கத்தை எளிதாக்குவதற்கும், திட்டச் செயலாக்கம் தொடர்பாக ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அவற்றைத் தீர்ப்பதற்கும், பயனாளி நிறுவனங்களுடன் வாராந்திர கூட்டங்களும் மாதாந்திரப் பயிலரங்குகளும் நடத்தப்படுகின்றன. இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சம்பந்தப்பட்ட தரப்பினரின் பங்கேற்பை எளிதாக்குவதற்கும், பல்வேறு மாநிலங்களில் விழிப்புணர்வு மற்றும் அறிவுப் பகிர்வு அமர்வுகளுக்கும் அமைச்சகம் ஏற்பாடு செய்கிறது.
ஜவுளித் துறையில், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 170 நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அண்மையில் செய்யப்பட்ட திருத்தங்கள் குறித்த தகவல்களைப் பரப்புவதற்கு அனைத்து முக்கிய ஜவுளித் தொழில் சங்கங்களுடன் அமைச்சகம் முனைப்புடன் ஈடுபட்டுள்ளது. இந்தத் திருத்தத்தின் விளைவாக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்கேற்பு கணிசமாக அதிகரித்துள்ளது. இத்திட்டத்தின் 3-ஆம் சுற்றின் கீழ் பெறப்பட்ட 96 விண்ணப்பங்களில் 65 (சுமார் 68%) எம்எஸ்எம்இ துறையைச் சார்ந்தவையாகும்.
மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கரிட்டா இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290316®=3&lang=1
***
TV/SMB/KR
(रिलीज़ आईडी: 2290478)
आगंतुक पटल : 12