மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் கற்றல், ஆராய்ச்சி, ஆக்கப்பூர்வமான தொழில்நுட்ப முன்முயற்சிகளின் விரிவாக்கம்

प्रविष्टि तिथि: 27 JUL 2026 6:50PM by PIB Chennai

மத்திய கல்வி அமைச்சகம், ரூ. 100 கோடி தனி ஒதுக்கீட்டிற்குப் பதிலாக, தனது முதன்மை மத்திய அரசின் நிதியுதவித் திட்டமான 'சமக்ர சிக்ஷா' மூலம் டிஜிட்டல் கல்வி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டைக் கையாளுகிறது. குஜராத்தின் ஆரவல்லி மற்றும் சபர்காந்தா மாவட்டங்கள் போன்ற கிராமப்புற, தொலைதூர மற்றும் பழங்குடியினர் பகுதிகள் உட்பட, நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் டிஜிட்டல் கற்றலை மேம்படுத்துவதற்காக, சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் பிஎம் இவித்யா மற்றும் தீக்ஷா போன்ற தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முன்முயற்சிகளை அமைச்சகம் செயல்படுத்துகிறது. கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறைகளில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் மூலம் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதே இந்த முன்முயற்சிகளின் நோக்கமாகும்.

 

அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் ஆகிய துறைகளில் (ஏவிஜிசி) தொழில்துறைக்குத் தேவையான திறன்களை மாணவர்களுக்கு அளிக்கும் வகையில், 2026–27 மத்திய பட்ஜெட்டின் கீழ், மும்பையில் உள்ள இந்திய படைப்பாற்றல் தொழில்நுட்பக் கழகத்துடன் (IICT) இணைந்து 15,000 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் ஏவிஜிசி உள்ளடக்க ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

 

மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி, இன்று மக்களவையில் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290085&reg=3&lang=1

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2290171) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी