வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டம் 2.0-வின் கீழ் 99.07 லட்சம் வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன
இடுகை இடப்பட்ட நாள்:
27 JUL 2026 5:24PM by PIB Chennai
நாடு முழுவதும் உள்ள தகுதியுடைய நகர்ப்புறப் பயனாளிகளுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய அனைத்து வானிலை சூழல்களையும் எதிர்கொள்ளக்கூடிய வீடுகளை வழங்குவதற்கு மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் 2015 ஜூன் 25 முதல் பிரதமரின் வீட்டு வசதி – நகர்ப்புறம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தை மேம்படுத்தி மேலும் ஒரு கோடி தகுதியுடைய பயனாளிகளுக்கு உதவும் வகையில் நாடு முழுவதுமுள்ள நகர்ப்புறங்களில் இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் 2024 செப்டம்பர் 1 முதல் தொடங்கியது. இத்திட்டம் 4 முக்கியப் பிரிவுகளின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
பயனாளிகள் தலைமையிலான கட்டுமானம், கூட்டாண்மையுடன் கூடிய குறைந்தவிலை வீட்டு வசதி, குறைந்த வாடகை வீட்டு வசதி, வட்டி மானியத் திட்டம் ஆகியவை இதில் அடங்கும். இத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை https://pmay-urban.gov.in/uploads/guidelines/Operational-Guidelines-of-PMAY-U-2.pdf. என்ற இணையதளத்தில் காணலாம்.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் சமர்ப்பித்த திட்டப் பரிந்துரைகளின் அடிப்படையில், பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் – நகர்ப்புறம் 2.0 திட்டத்தின் கீழ் 16.20 லட்சம் வீடுகள் உட்பட இதுவரை மொத்தம் 127.68 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 2026 ஜூ 13-ன் நிலவரப்படி, நாடு முழுவதும் 121.03 லட்சம் வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அத்துடன் 99.07 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 45,982 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 43,907 வீடுகளுக்கான கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டன. இவற்றில் 35,961 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இத்தகவலை மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திரு டோகன் சாஹூ மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289996®=3&lang=1
****
TV/IR/LDN/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2290107)
வருகையாளர் எண்ணிக்கை : 49