கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய சுதந்திரப் போராட்டம் தொடர்பான அருங்காட்சியகங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 27 JUL 2026 4:16PM by PIB Chennai

இந்திய சுதந்திரப் போராட்டம் தொடர்பான அருங்காட்சியகங்கள்கண்காட்சிகள் ஆகியவற்றை பராமரித்தல்மேம்படுத்துதல் பணிகளை இந்திய தொல்பொருள் ஆய்வகம் மேற்கொண்டு வருகிறது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பாரம்பரியம் குறித்து குழந்தைகள் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளூர் பள்ளிகள்கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுடன் இணைந்து சுதந்திர தினம்குடியரசுதினம்உலக பாரம்பரிய தினம் மற்றும் வாரம்சர்வதேச அருங்காட்சியக தினம் ஆகிய முக்கிய நிகழ்வுகளின்போது இந்திய தொல்பொருள் ஆய்வகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

அத்துடன் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும்ஊக்குவிக்கவும்கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள அருங்காட்சியகங்களை ஆண்டுமுழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள்கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில் சென்னையிலுள்ள புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்திற்கு 2025 – 26-ம் நிதியாண்டில் ரூ.35.049 லட்சம் செலவிடப்பட்டது.

இத்தகவலை மத்திய கலாச்சாரம் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289923&reg=3&lang=1

***

TV/IR/LDN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2290083) வருகையாளர் எண்ணிக்கை : 34
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi