திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடல்சார் துறையில் திறன் மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 27 JUL 2026 3:52PM by PIB Chennai

மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகம், நாடு முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் திறன் பயிற்சி, மறுதிறன் பயிற்சி, மேம்பட்ட திறன் பயிற்சிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம், மக்கள் கல்வி நிறுவனம், தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம், தொழிற்பயிற்சி கல்வி நிறுவனங்கள் வாயிலாக செயல்படுத்தப்படும் கைவினைஞர் பயிற்சித் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் விரிவான கட்டமைப்புகள் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. கடல்சார் துறை உள்ளிட்ட பல்வேறு தொழில்துறை சார்ந்த திறன்களுடன், இந்திய இளைஞர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

கடலோரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உட்பட இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவற்றில் (i) பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம், பிற திறன் மேம்பாட்டு முயற்சிகள் மூலம், தொழில்துறைக்கு ஏற்ற திறன்களை வழங்குதல் (ii) சரக்குப் போக்குவரத்து, துறைமுக செயல்பாடுகள், கிடங்கு மேலாண்மை, விநியோக நடைமுறைகளுக்கான மேலாண்மை, கடல்சார் பணிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிற்சி அளித்தல் (iii) தொழில்துறையினருடன் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்ட தேசிய திறன் தகுதி கட்டமைப்பின் அடிப்படையிலான தகுதித் தொகுப்புகளுடன் பாடத்திட்டங்களை ஒருங்கிணைத்தல் (iv) ஏற்கனவே திறன் படைத்த தொழிலாளர்களுக்கு, முந்தைய கற்றல் நடைமுறைகளை அங்கீகரித்தல் முறையை ஊக்குவித்தல் (v) தொழில்துறை ஒத்துழைப்பு, வேலைவாய்ப்பு வசதி மூலம் பயிற்சி பெற்றவர்களை வேலைவாய்ப்புகளுடன் இணைப்பதை ஊக்குவித்தல் போன்றவை அடங்கும். இம்முயற்சிகள் கடலோரப் பகுதி இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதையும், கடல்சார், சரக்குப் போக்குவரத்து, அது சார்ந்த துறைகளில் மனிதவளத் தேவைகளைப் பூர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

மக்களவையில், மத்திய திறன் மேம்பாடு,  தொழில் முனைவோர் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி இன்று எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289884&reg=3&lang=1

(Release ID: 2289884)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2290068) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी