ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கம்பத் வளைகுடா குறுக்கே அணை கட்டுவதன் மூலம் பல்வேறு பயன்கள் ஏற்பட வாய்ப்பு- மத்திய அமைச்சர் திரு ராஜ் பூஷண் சௌத்ரி

இடுகை இடப்பட்ட நாள்: 27 JUL 2026 4:17PM by PIB Chennai

குஜராத் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படிகம்பத் (கல்பசார்) வளைகுடா திட்டம் மாநில அரசின் இலட்சியம் மிக்க நீர்வளத் திட்டமாகும். கம்பத் வளைகுடாவின் குறுக்கே ஒரு அணை கட்டுவதன் மூலம்உலகின் மிகப்பெரிய கடலோர நன்னீர் தேக்கங்களில் ஒன்றை உருவாக்குவது இதன் நோக்கமாகும்.

இத்திட்டம் செயல்படுத்தப்படும்போது பாசனம் மற்றும் இதர பயன்பாடுகளுக்கு உரிய நீர் ஆதாரத்தை அளிப்பதன் மூலம்   சௌராஷ்டிரா பிராந்தியத்தில் நன்னீர் இருப்பை அதிகரிக்கவும்நீர் பற்றாக்குறையை குறைக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கம்பத் வளைகுடாவின் குறுக்கே அமையும் அணைப் பகுதியில் நெடுஞ்சாலை மற்றும் ரயில் போக்குவரத்திற்கான வழித்தடம் அமைப்பதும் இத்திட்டத்தில் அடங்கியுள்ளது. இதன்மூலம்பாவ் நகர் - சூரத் இடையேயான பயண தூரம் 179 கிலோமீட்டர் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள தரைவழிப் பாதையில் சுமார் 356 கிலோமீட்டர் தொலைவிலான தூரம் அணை வழித்தடத்தின் மூலம் சுமார் 177 கிலோ மீட்டராகக் குறையும்.

இத்தகவலை ஜல் சக்தித் துறை இணையமைச்சர் திரு ராஜ் பூஷண் சௌத்ரி மாநிலங்களைவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289927&reg=3&lang=1

***

TV/IR/LDN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2290059) வருகையாளர் எண்ணிக்கை : 46
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी