சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தொலைத்தொடர்புத் துறை, பிஎஸ்என்எல் ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர்வு முகாம் ஆகஸ்ட் 28 அன்று நடைபெறுகிறது
प्रविष्टि तिथि:
27 JUL 2026 3:24PM by PIB Chennai
தொலைத்தொடர்புத்துறை தமிழ்நாடு வட்டம், மதுரை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய பிஎஸ்என்எல் எஸ்எஸ்ஏ-க்களைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களின் குறைகளுக்கு தீர்வு காண்பதற்காக 2026 ஆகஸ்ட் 28 அன்று இணையவழியில் குறைதீர்வு முகாம் நடைபெற உள்ளது.
இதையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் தங்களுடைய குறைகளை பரிந்துரைக்கப்பட்ட படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் JLCCA (ஓய்வூதியம்) தமிழ்நாடு வட்டம் சென்னை 600 008 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது itccanen[at]nic[dot]in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். மேலும் அலுவலகத்தில் ஓய்வூதியர் உதவி மையத்தில் உள்ள குறைதீர்ப்புப் பெட்டியிலும் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி 2026 ஆகஸ்ட் 7 ஆகும்.
ஓய்வுதியதாரர்களின் நீண்டகால குறைகள் தீர்க்கப்படாமல் இருந்தால் மட்டுமே அதுகுறித்து பரிசீலிக்கப்படும். முதன்முறையாக சமர்ப்பிக்கப்படும் குறைகள் ஏற்றுக்கொள்ளப்படாது.
அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் / ஓய்வுதியம் பெறுவோரின் சங்கங்களின் பிரதிநிதிகள், ஓய்வூதிய குறைதீர்வு அமைப்பில் கலந்துகொள்ளலாம். ஆனால், ஓய்வூதியதாரர்கள் இல்லாத நிலையில் அவர்களுடைய குறைகளை முன்வைக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனினும் கல்வியறிவு பெற்ற ஓய்வூதியம் பெறுவோர் / குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் / சிறுவயதினராக இருந்தால் அத்தகைய ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியதாரர்களின் குறைகளை முன்வைக்க அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதிய சங்கத்தின் பிரதிநிதி அனுமதிக்கப்படுவார். இதுகுறித்த அறிவிப்பு www.coca.gov.in/ccatn என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. குறைகளை சமர்ப்பிப்பதற்கான படிவத்தை அதிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். குறைதீர்வு குறித்த கூட்டம் நடக்கும் நேரம் மற்றும் Meeting Link பின்னர் தெரிவிக்கப்படும்.
***
TV/IR/LDN/KR
(रिलीज़ आईडी: 2290031)
आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English