திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
பிரதமரின் திறன் மேம்பாடுத் திட்டம் 4.0-வின் கீழ் 35,17,022 பேர் பதிவு செய்துள்ளனர்
प्रविष्टि तिथि:
27 JUL 2026 3:59PM by PIB Chennai
திறன் மேம்பாட்டு, தொழில் முனைவு அமைச்சகத்தின் கீழ், திறன் மேம்பாட்டு சூழல் அமைப்பிற்காக மின்னணு பொது உட்கட்டமைப்பான திறன் இந்தியா மின்னணு மையத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. 2023 செப்டம்பர் 13 அன்று தொடங்கப்பட்ட இம்மையம் பயிற்சி, மதிப்பீடு, சான்றளித்தல், வேலைவாய்ப்பு, தொழில் முனைவோர் சேவைகளை ஒருங்கிணைத்து ஒரே தளத்தில் கொண்டு வருகிறது.
திறன் இந்தியா மின்னணு மையத்தின் தரவுகளின்படி, பிரதமரின் திறன் மேம்பாடுத் திட்டம் 4.0-வின் கீழ் 35,17,022 பயிற்சி பெறுபவர்களும், தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், 52,98,397 பேரும் பொதுக் கல்வி மையத் திட்டத்தின் கீழ், 10,19,992 பேரும், செயற்கை நுண்ணறிவு தயார்நிலைக்கான திறன் முன்முயற்சியின் கீழ், 4,96,755 பேரும் பதிவு செய்துள்ளனர்.
மொத்தம் 78,647 பயிற்சியாளர்கள் உரிய அடையாள அட்டையைக் கொண்டுள்ளனர். மேலும் பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் 2.0-வின் கீழ் (குறுகியகாலப் பயிற்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள்) 13,633 பயிற்சி மையங்களும், பொதுக் கல்விமைய திட்டத்தின் கீழ் 296 பயிற்சி மையங்களும், 13,888 தொழில்பயிற்சி மையங்களும், திறன் இந்தியா மின்னணு மையத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289900®=3&lang=1
***
TV/IR/LDN/KR
(रिलीज़ आईडी: 2290010)
आगंतुक पटल : 13