நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
தேசிய இ-விதான் செயலி, சட்டப்பேரவை நடவடிக்கைகளின் டிஜிட்டல் செயல்திறனை மேம்படுத்தியுள்ளது
प्रविष्टि तिथि:
27 JUL 2026 3:48PM by PIB Chennai
நாட்டில் உள்ள 37 மாநில/யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளில், 33 சட்டப்பேரவைகள், தேசிய இ-விதான் செயலி திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இவற்றில், 21 சட்டப்பேரவைகள் இந்தத் திட்டத்தின் கீழ், டிஜிட்டல் பேரவைகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
தேசிய இ-விதான் செயலித் திட்டம் மத்திய நிதியுதவித் திட்ட மாதிரியின்படி செயல்படுத்தப்படுகிறது. இதன் மொத்தத் திட்ட மதிப்பீடு ரூ.673.94 கோடியாகும். இதில் மத்திய அரசின் பங்களிப்புத் தொகையாக ரூ.423.60 கோடி என வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையின் இரு அவைகளிலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக ரூ.23,58,20,600/- நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம் உட்பட இத்திட்டத்தில் பங்கேற்கும் அனைத்து மாநில/யூனியன் பிரதேச சட்டபேரவைகளுக்கும், மத்திய திட்ட மேலாண்மைப் பிரிவு மூலம், திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் வாயிலாகத் தேவையான தொழில்நுட்ப உதவியும் வழங்கப்படுகிறது.
தேசிய இ-விதான் செயலி திட்டத்தின் இடைக்கால மதிப்பீட்டின்படி, சட்டப்பேரவையின் நடைமுறைகளை டிஜிட்டல் மயமாக்குதல், காகிதப் பயன்பாடு சார்ந்த நடைமுறைகளைக் குறைத்தல், அவையின் பணிகளை விரைவாகச் செயலாக்குதல், அவை தொடர்பானத் தகவல்களை எளிதில் பெறுவதற்கு வகை செய்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் இத்திட்டம் சட்டப்பேரவைகளின் செயல்திறனை மேம்படுத்தியுள்ளது. மேலும், ஆவணங்களை அச்சிடுதல், கையாளுதல், சேமித்தல் போன்றவற்றிற்கு செலவிடப்படும் தொகைகளின் சேமிப்பிற்கும் இது வழிவகுத்துள்ளது.
மாநில, யூனியன் பிரதேச சட்டப்பேரவைகள் தன்னாட்சி பெற்ற அமைப்புகளாகும். அதற்கேற்ப, அந்தந்த மாநில சட்டப்பேரவைகளின் தயார்நிலைக்கு உட்பட்டு, கலந்தாலோசித்த பின்னர் தேசிய இ-விதான் செயலித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் இன்று எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், இதனை தெரிவித்துள்ளார்.
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289881®=3&lang=1
***
TV/SV/KR
(रिलीज़ आईडी: 2289984)
आगंतुक पटल : 14