ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்

प्रविष्टि तिथि: 24 JUL 2026 5:47PM by PIB Chennai

வறுமை ஒழிப்பை நோக்கமாகக் கொண்ட தீன்தயாள் அந்த்யோதயா- தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின்  (DAY-NRLM) கீழ் இயங்கும் தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம், வேலைவாய்ப்புடன் இணைந்த திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம், கிராமப்புற இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி அளிப்பதையும், அவர்களுக்கான நிலையான வாழ்வாதாரத்தை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை மொத்தம் 18.45 லட்சம் பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, 12.35 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கிராமப்புற இளைஞர்களுக்குப் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அளிப்பதற்காக விண்வெளி மற்றும் விமானப் போக்குவரத்து, வேளாண்மை, வாகனம், கட்டுமானம், மின்னணுவியல், உணவுப் பதப்படுத்துதல், சுகாதாரம், ஊடகம் & பொழுதுபோக்கு, விளையாட்டு, தொலைத்தொடர்பு, ஜவுளி, சுற்றுலா உள்ளிட்ட துறைகள்  அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் திரு கமலேஷ் பாஸ்வான், மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த  பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289001&reg=3&lang=1

***

TV/RB/RJ


(रिलीज़ आईडी: 2289689) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी