சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் நீதித்துறைச் சீர்திருத்தங்கள் மூலம் புதிய குற்றவியல் சட்டங்களை நாடு முழுவதும் செயல்படுத்துவதில் அரசு தீவிரம்
प्रविष्टि तिथि:
25 JUL 2026 9:07PM by PIB Chennai
இந்திய நீதிச் சட்டம் 2023, இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம் 2023 மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் 2023 (பிஎஸ்ஏ) ஆகியவை 1 ஜூலை 2024 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளன. சம்பந்தப்பட்ட அறிவிப்புகளையும் விதிகளையும் வெளியிடுதல், டிஜிட்டல் செயலிகளைப் பயன்படுத்துதல் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் திறனை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றை செயல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மேற்கொண்டுள்ளன.
பெரும்பாலும், காவல்துறையினர் மற்றும் மாநில அளவிலான பிற பங்குதாரர்களுக்கான பயிற்சி நடவடிக்கைகளை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அனைத்து 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் உள்ள முதன்மைப் பயிற்சியாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் இணையவழி கருத்தரங்குகளை நடத்தியுள்ளது.
மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2289475®=3&lang=1
***
TV/RB/RJ
(रिलीज़ आईडी: 2289608)
आगंतुक पटल : 7