சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தகுதிவாய்ந்த வாக்காளர்களைப் பாதுகாப்பதற்கான பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், எஸ்ஐஆர் பணிகள்

प्रविष्टि तिथि: 25 JUL 2026 9:05PM by PIB Chennai

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செய்திக்குறிப்பின்படி, வாக்காளர் பட்டியல்கள் துல்லியமாகவும், தற்போதைய நிலவரத்திற்கேற்பவும் இருப்பதை உறுதி செய்யவும், தகுதியற்ற அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதுடன் தகுதியுள்ள வாக்காளர்கள் யாரும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்யவும், நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தகுதிவாய்ந்த வாக்காளர்களின் பெயர்கள் தவறாக நீக்கப்படுவதைத் தடுக்க, தேர்தல் ஆணையம் பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, வாக்காளர் ஒருவரைக் கண்டறிய முடியவில்லை என்று கருதுவதற்கு முன், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் முன்கூட்டியே தகவல் தெரிவித்தல் மற்றும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று முறை நேரில் சென்று விசாரித்தல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும்பரிந்துரைக்கப்பட்ட கணக்கெடுப்புப் படிவத்தில் அதற்கான காரணங்களைப் பதிவு செய்த பின்னரும், வாக்காளர் பதிவு விதிகள், 1960-இன் கீழ் உள்ள நடைமுறையைப் பின்பற்றிய பின்னரும்தான் நீக்கம் செய்யப்படுகின்றன.

கணக்கெடுப்பு மற்றும் கோரிக்கைகள்/மறுப்புகள் தொடர்பான நிலைகளின்போது, பதிவுகளைச் சரிபார்க்கவும் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டவும் அரசியல் கட்சிகளால் பரிந்துரைக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.

கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளுக்கான காலத்தின்போது பெறப்பட்ட குறைகள் பரிசீலிக்கப்பட்டு, தேவையேற்பட்டால், பதிவேட்டை இறுதி செய்வதற்கு முன் பெயர்கள் மீண்டும் சேர்க்கப்படுகின்றன.

மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய சட்டம்  மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2289473&reg=3&lang=1

***

TV/RB/RJ


(रिलीज़ आईडी: 2289606) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी