சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆயுஷ்மான் ஆரோக்கிய முகாம்கள் புதுதில்லி கடமை மாளிகையில் நிறைவு

இடுகை இடப்பட்ட நாள்: 24 JUL 2026 6:06PM by PIB Chennai

மத்திய சுகாதார அமைச்சகம், புதுதில்லி கடமை மாளிகையில் 2026 ஜூலை 22 முதல் 24 வரை மூன்று நாள்கள் மூன்று இடங்களில் ஆயுஷ்மான் ஆரோக்கிய முகாம்களை ஏற்பாடு செய்தது. மத்திய காசநோய் பிரிவு, தில்லி காசநோய் பிரிவு, தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம், சுகாதார அமைச்சகத்தின் மக்கள் ஆரோக்கிய இயக்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இது ஏற்பாடு செய்யப்பட்டது.

கடமை மாளிகைகளில் பணிபுரியும் அரசு அதிகாரிகள், மத்திய செயலக ஊழியர்களிடையே நோய்த் தடுப்பு சுகாதாரத்தை ஊக்குவிப்பது, ஆரம்பகால நோயறிதலை எளிதாக்குவது, ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வை வலுப்படுத்துவது ஆகியவை இதன் நோக்கம் ஆகும்.

மூன்று நாள் முன்முயற்சிக்கு ஊக்கமளிக்கும் வரவேற்பு கிடைத்தது. 16-க்கும் மேற்பட்ட அமைச்சகங்களைச் சேர்ந்த 1700-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள், பிற பணியாளர்கள் இலவச சுகாதாரப் பரிசோதனை, மருத்துவ ஆலோசனை போன்ற சேவைகளைப் பெற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289042&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2289421) வருகையாளர் எண்ணிக்கை : 37
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी