ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் ஊரக வீட்டுவசதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 6.70 லட்சம் வீடுகள் கட்டி முடித்து சாதனை!

प्रविष्टि तिथि: 24 JUL 2026 5:44PM by PIB Chennai

பிரதமரின் ஊரக வீட்டுவசதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இதுவரை 6.70 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுப் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

 

இத்தகவலை மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை இணையமைச்சர் டாக்டர் சந்திர சேகர் பெம்மசானி இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தின் நிலவரம் (ஜூன் 2026 வரையிலான தரவுகள்):

ஒப்புதல் அளிக்கப்பட்ட வீடுகள்: 7,34,034

 

கட்டி முடிக்கப்பட்ட வீடுகள்: 6,70,632

 

நிலுவையில் உள்ள வீடுகள்: 63,402

 

தமிழகத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட வீடுகளில் பெரும்பான்மையான வீடுகள் வெற்றிகரமாகக் கட்டி முடிக்கப்பட்டு, மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வீடுகளே கட்டப்படும் பணியில் நிலுவையில் உள்ளன.

 

இத்திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்காகக் கிராமப்புறப் பயனாளிகளுக்குப் பின்வரும் நிதியுதவிகள் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது: சமவெளிப் பகுதிகளில் வீடு கட்டுவதற்கு ரூ.1.20 லட்சமும், வடகிழக்கு மற்றும் மலைப் பிரதேசங்களில் ரூ.1.30 லட்சமும் வழங்கப்படுகிறது.

 

கிராமப்பு தூய்மை பாரத இயக்க  திட்டத்துடன் இணைத்து, கழிப்பறை கட்டுவதற்காகத் தனியாக ரூ.12,000 வழங்கப்படுகிறது. இத்துடன் 'வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் மூலம் வீடுகட்டும் பணியில் ஈடுபடும் பயனாளிகளுக்குக் குறிப்பிட்ட நாட்களுக்கான கூலித் தொகையும் வழங்கி இணைப்பு உறுதி செய்யப்படுகிறது.

 

நாடு முழுவதும் 2026 ஜூன் வரையிலான நிலவரப்படி, மொத்தம் ஒப்புதல் அளிக்கப்பட்ட 3கோடியே91லட்சத்து 70ஆயிரத்தி 613 வீடுகளில், 3 கோடியே 8 லட்சத்து 66 ஆயிரத்தி 128 வீடுகள் வெற்றிகரமாகக் கட்டி முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288998&reg=3&lang=1

செய்தி அடையாள எண் 2288998

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2289249) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी