ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தீன் தயாள் அந்தயோதயா திட்டத்தால் நாடு முழுவதும் 10 கோடிப் பெண்கள் பயன்

प्रविष्टि तिथि: 24 JUL 2026 5:43PM by PIB Chennai

மத்திய அரசின் ‘தீன் தயாள் அந்தயோதயா திட்டம் - தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின்’ கீழ் நாடு முழுவதும் இதுவரை 92 லட்சம் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு, 10.05 கோடி கிராமப்புறச் சகோதரிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.

 

இத்தகவலை மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை இணையமைச்சர் டாக்டர் சந்திர சேகர் பெம்மசானி இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

 

கிராமப்புறச் சகோதரிகளின் நிதிப் பங்களிப்பை விரிவுபடுத்தும் நோக்கில், 'கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள்' மற்றும் வங்கிகளுடன் இணைந்து நிதியறிவுப் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

 

நிதித் திட்டமிடல், சேமிப்பு, கடன் மேலாண்மை, காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் தொழில் தொடங்குவது குறித்த இந்த சிறப்புப் பயிற்சிகளை, கடந்த 2025-26 நிதியாண்டில் மட்டும் 3.81 கோடிக்கும் அதிகமான சுய உதவிக்குழுச் சகோதரிகள் பெற்றுப் பயனடைந்துள்ளனர்.

 

சுய உதவிக்குழுவைச் சேர்ந்தச் சகோதரிகள் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி ‘லட்சாதிபதி சகோதரி’  திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு ரூ.1 லட்சம் வருமானம் ஈட்டுவதை ஊக்குவிக்கும் வகையில், பொதுத்துறை வங்கிகள் மற்றும் முன்னணித் தனியார் வங்கிகள் மூலம் மலிவு வட்டி வீதத்தில் பிரத்யேகக் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் சகோதரிகள் புதிய தொழில்களைத் தொடங்கவும், இருக்கும் தொழில்களை விரிவுபடுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288996&reg=3&lang=1

 

செய்தி அடையாள எண் 2288996

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2289233) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी