கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
கப்பல் கட்டும் தொழிற்துறையை சீரமைத்தல்
இடுகை இடப்பட்ட நாள்:
24 JUL 2026 4:53PM by PIB Chennai
மத்திய பட்ஜெட் 2025-26 இன் கீழ் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவின் கப்பல் கட்டுமானத் துறையை அரசு மறு ஆய்வு செய்துள்ளது. இதன்படி, கப்பல் கட்டும் துறைக்கு புத்துயிர் ஊட்ட 4 உத்திகளை ஏற்றுக்கொண்டுள்ளது. உள்நாட்டு கப்பல் கட்டும் திறன், கடல்சார் நிதி மற்றும் திறன் மேம்பாட்டை வலுப்படுத்துவதற்காக 69,725 கோடி ரூபாய் விரிவான தொகுப்புக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கப்பல் கட்டுதல் நிதி உதவி திட்டம், இந்திய கப்பல் கட்டும் தளங்களின் செலவு குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக 24,736 கோடி ரூபாய் செலவில் கப்பல் கட்டும் நிதி உதவிக் கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் கட்டுதல் மற்றும் கடல்சார் துறைக்கு நீண்ட கால நிதியுதவி வழங்குவதற்காக 20,000 கோடி ரூபாய் கடல்சார் முதலீட்டு நிதி மற்றும் 5,000 கோடி ரூபாய் வட்டி ஊக்குவிப்பு நிதி ஆகியவற்றை உள்ளடக்கிய 25,000 கோடி ரூபாய் கடல்சார் மேம்பாட்டு நிதி தொகுப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288924=48&lang=1
****
TV/PKV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2289230)
வருகையாளர் எண்ணிக்கை : 42