ஊரக வளர்ச்சி அமைச்சகம்
வளர்ச்சியடைந்த இந்தியா ஊரக வாழ்வாதார இயக்க வேலைவாய்ப்பு நாட்கள் 125 ஆக உயர்வு - மத்திய அரசு தகவல்!
प्रविष्टि तिथि:
24 JUL 2026 5:41PM by PIB Chennai
ஊரகப் பகுதி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த சட்டப்பூர்வ வேலைவாய்ப்பு உறுதிநாட்களை 100-லிருந்து 125 நாட்களாக உயர்த்தி, மத்திய அரசு புதிய ‘வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான ஊரக வாழ்வாதார இயக்க சட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
மத்திய அரசின் இந்த புதிய சட்டம் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் கமலேஷ் பஸ்வான் இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறியிருப்பதாவது:
நடப்பு 2026-27 நிதியாண்டில் இத்திட்டத்திற்காக மத்திய அரசு தனது பங்காக ரூ.95,692.31 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. ஊரக வேலைவாய்ப்புத் திட்ட வரலாற்றிலேயே ஒதுக்கப்பட்டுள்ள மிக அதிகபட்ச வரவு செலவுத் திட்ட மதிப்பீடு (Budget Estimate) இதுவேயாகும். மாநில அரசுகளின் பங்களிப்பையும் சேர்க்கும்போது, இத்திட்டத்தின் ஒட்டுமொத்த மதிப்பீடு ரூ.1.51 லட்சம் கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிலாளர்களுக்கு ஊதியம் தாமதமின்றிச் சென்றடைவதை உறுதி செய்ய 'தேசிய மின்னணு நிதி மேலாண்மை அமைப்பு' (NeFMS) மற்றும் 'நேரடிப் பயனாளி பரிமாற்றம்' (DBT) முறைகள் மூலம் ஊதியம் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
மேலும், இத்திட்டத்தை நேரடியாகவும் நிகழ்நேரத்திலும் கண்காணிக்கத் தொழில்நுட்ப அடிப்படையிலான 'மேலாண்மை தகவல் அமைப்பு' உருவாக்கப்பட்டு, மத்திய அரசின் அதிகாரிகள் மாநிலங்களுக்கு நேரில் சென்று வழிகாட்டுதல்களையும் வழங்கி வருகின்றன
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288994®=3&lang=1
செய்தி அடையாள எண் 2288994
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2289223)
आगंतुक पटल : 8