சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் கீழ் 2026 ஜூலை 20 நிலவரப்படி 94.87 கோடிக்கும் அதிகமான கணக்குகள் உருவாக்கம்

प्रविष्टि तिथि: 24 JUL 2026 3:54PM by PIB Chennai

2026 ஜூலை 20 நிலவரப்படி, ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் 94.87 கோடி ஆயுஷ்மான் பாரத் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் இணைந்துள்ள மருத்துவமனைகள், கிளினிக்குகள், மருந்தகங்கள் மற்றும் ரத்த வங்கிகள் அடங்கிய சுகாதார மையப் பதிவேட்டில் 5.36 லட்சம் மையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுகாதார நிபுணர்கள் பதிவேட்டில் 10.09 லட்சம் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

2025 ஜூன்-ஆகஸ்ட் இடையே நடத்தப்பட்ட மதிப்பீட்டு ஆய்வில், இத்திட்டம் காத்திருப்பு நேரத்தைக் குறைத்து, சேவை அணுகலை மேம்படுத்தி, குறிப்பாகப் பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்குப் பயனளித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

நோயாளியின் தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மையப்படுத்தப்பட்ட தரவுச் சேமிப்பு ஏதுமின்றி, நோயாளியின் சம்மதத்துடன் மட்டுமே பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றித் தகவல்கள் பரிமாறப்படுகின்றன.

தமிழ்நாட்டின் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் ஆரோக்கிய திட்டம் உள்ளிட்ட பல தேசிய மற்றும் மாநில அளவிலான சுகாதாரத் திட்டங்கள் இத்தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இத்தகவலை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு. பிரதாப்ராவ் ஜாதவ் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288848&reg=48&lang=1

****

TV/EA/SH


(रिलीज़ आईडी: 2289208) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी