விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தனித்துவமான டிஜிட்டல் விவசாயிகள் அடையாள எண்களை உருவாக்குவதில் முன்னேற்றம்

प्रविष्टि तिथि: 24 JUL 2026 5:57PM by PIB Chennai

மானியங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை நேரடியாக வழங்குவதை முறைப்படுத்த, 2026 ஜூலை 20 நிலவரப்படி 10.18 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் அடையாள எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் வாழ்க்கையை எளிதாக்க மாநிலங்கள் இந்த அடையாள எண்களைப் பயன்படுத்தி வருகின்றன. பிரதமரின் விவசாயி கவுரவிப்பு நிதித் திட்டம் மற்றும் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றில் பதிவு செய்தல், குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையிலான கொள்முதல், கடன் வசதி பெறுதல், இடுபொருள் விநியோகம் மற்றும் பேரிடர் நிவாரணம் போன்ற நேரடிப் பயன் பரிமாற்றத் திட்டங்களை ஒருங்கிணைக்க இந்த எண்கள் உதவுகின்றன.

 

20.07.2026 நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 10.18 கோடி விவசாயிகள் அடையாள எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ்நாட்டில் 36,48,841 எண்கள் அடங்கும்.

 

செயற்கைக்கோள் படங்களின் ஒருங்கிணைப்பு, பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்தி, அதன் செயல்பாடுகளைச் சீரமைத்துள்ளது. வேளாண் துறையில் ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கான பயிற்சிகளை அளிக்கவும், அதற்கான வசதிகளை ஏற்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, 'வேளாண் இயந்திரமயமாக்கல் துணைத் திட்டம்' (SMAM) மூலம், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் பட்டதாரிகள் மற்றும் சிறு, குறு விவசாயிகள் கிசான் ட்ரோன்களை வாங்குவதற்கு 50% வரை நிதியுதவி வழங்குவதன் வாயிலாக ட்ரோன்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது.

 

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு ராம்நாத் தாக்கூர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத்  தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289025&reg=3&lang=1

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2289199) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी