மாநிலங்களவைச் செயலகம்
azadi ka amrit mahotsav

கார்கில் வெற்றி தினம் குறித்து மாநிலங்களவைத் தலைவர் இன்று முன்வைத்த குறிப்பின் முழுவிவரம்

प्रविष्टि तिथि: 24 JUL 2026 4:45PM by PIB Chennai

தலைவர்:  மாண்புமிகு உறுப்பினர்களே, 1999-ம் ஆண்டு கார்கில் போரில் இந்தியா பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையிலும், நமது தேசத்தின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் முன்மாதிரியான துணிச்சல், வீரம் மற்றும் அசைக்க முடியாத கடமையுணர்வுடன் பாதுகாத்த நமது ஆயுதப் படைகளின் தீரம் மிக்க அதிகாரிகளையும் வீரர்களையும் கௌரவிக்கும் வகையிலும் ஜூலை 26 அன்று தேசம் கார்கில் வெற்றி தினத்தைக் கடைப்பிடிக்கவுள்ளது.

இந்தத் தருணத்தில், தேசப் பணிக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரம் செறிந்த தியாகிகளுக்கு இந்த அவை மதிப்புமிகு அஞ்சலியை செலுத்துகிறது. அசாதாரணமான சவால்களை எதிர்கொண்டு, தங்களின் வெல்ல முடியாத துணிச்சல், அசைக்க முடியாத உறுதி, தன்னலமற்ற அர்ப்பணிப்பு ஆகியவற்றால்  நாட்டிற்குத் தொடர்ந்து உத்வேகம் அளித்து, நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் காப்பதற்கான நமது கூட்டு உறுதிப்பாட்டை மீண்டும் நிலைநிறுத்தும் முப்படைகளின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வீரமரணம் அடைந்த தியாகிகளுக்கு இந்த அவையின் உறுப்பினர்கள் என்னுடன் இணைந்து தங்களின் மதிப்புமிகு அஞ்சலியை செலுத்துவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

தியாகிகளின் நினைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், உறுப்பினர்கள் அனைவரும் தத்தமது இடங்களில் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்துமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

(Release ID: 2288914)

****

TV/SMB/SH


(रिलीज़ आईडी: 2289177) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी