மருந்துகள் துறை
தமிழ்நாட்டில் 1,631 பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் செயல்படுகின்றன
प्रविष्टि तिथि:
24 JUL 2026 1:02PM by PIB Chennai
பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் நாடு முழுவதும் மக்களுக்குத் தரமான மருந்துகளைக் குறைந்த விலையில் வழங்கிவருகின்றன. நாடு முழுவதும் மொத்தம் 20,149 மக்கள் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. 30.06.2026 நிலவரப்படி தமிழ்நாட்டில் 1,631 மக்கள் மருந்தகங்கள் செயல்பாட்டில் உள்ளன.
இந்த மக்கள் மருந்தகங்களில் 2,110 வகையான மருந்துகளும் 315 மருந்துவச் சாதனங்கள், உபகரணங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. வணிகக் குறியீடு (பிராண்டட்) பெற்ற மருந்துகளை விட மக்கள் மருந்தகங்களில் 50 முதல் 80 சதவீதம் வரை விலைக் குறைவாக மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. தரத்தைப் பொறுத்தவரை சிறிதும் சமரசமின்றி தரமான மருந்துகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.
2027-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் மக்கள் மருந்துவர்களின் எண்ணிக்கையை 25,000 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயித்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் மருந்தகங்கள் தொடர்பாக புகார்கள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் 1800 180 8080 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288771®=48&lang=1
***
SS/PLM/ SM/SH
(रिलीज़ आईडी: 2289148)
आगंतुक पटल : 14