மருந்துகள் துறை
azadi ka amrit mahotsav

சந்தைப்படுத்தல் நடைமுறைகளுக்கு சீரான நெறிமுறை

प्रविष्टि तिथि: 24 JUL 2026 12:57PM by PIB Chennai

மருந்து சந்தைப்படுத்தல் நடைமுறைகளுக்கு சீரான நெறிமுறை 2015 என்ற முந்தைய நிலைக்கு  மாற்றாகமருந்து சந்தைப்படுத்தல் நடைமுறைகளுக்கு புதிய சீரான நெறிமுறையை 12.03.2024 அன்று மருந்துத் துறை  அறிவித்தது. இந்தக்  நெறிமுறை பின்னர் செப்டம்பர், 2025-ல் திருத்தப்பட்டது. இந்த நெறிமுறையின் நகல்https://pharma-dept.gov.in/policy/uniform-code-pharmaceutical-marketing-practices-ucpmp-2024-reg  என்ற மருந்துத் துறையின் இணையதளத்தில் கிடைக்கும். 

மருந்து நிறுவனங்களின் நெறிமுறை சார்ந்த சந்தைப்படுத்தல் நடைமுறைகளை நிர்வகிக்கும் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் விதிகள் திருத்தப்பட்டுள்ளன. இவற்றில்மருந்து சந்தைப்படுத்தல் நடைமுறைகளுக்கான நெறிமுறைக் குழுக்களை அமைத்தல்மருந்து நிறுவனங்களால் நெறிமுறை அதிகாரிகள் நியமிக்கப்படுதல்கட்டமைக்கப்பட்ட புகார் தீர்வு மற்றும் மேல்முறையீட்டு அமைப்புஇணக்கம் குறித்த சுய அறிவிப்புகளை சமர்ப்பித்தல் பரிந்துரைக்கப்பட்ட சந்தைப்படுத்தல் செலவினங்களை வெளிப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

விளம்பரச் செயல்பாடுகள் தொடர்பாக மருந்து நிறுவனங்களுக்கும் சுகாதார நிபுணர்கள்/சுகாதார நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்புகளை நிர்வகிக்கும் மேம்படுத்தப்பட்ட விதிகளையும் இந்த நெறிமுறைகள் கொண்டுள்ளன. நிறுவனங்கள் தொடர்புடைய தளத்தில் தாங்கள் செய்த சந்தைப்படுத்தல் செலவினங்கள் குறித்த வருடாந்தர அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கோருவதன் மூலம்செயலாக்கம் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகளை 2025-ல் அறிவிக்கப்பட்ட திருத்தங்கள்,மேலும் நெறிப்படுத்தின.

 மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

(Release ID: 2288768)

SS/SMB/SH


(रिलीज़ आईडी: 2289144) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी