ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பருத்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டம்

प्रविष्टि तिथि: 24 JUL 2026 2:47PM by PIB Chennai

நாட்டில் பருத்தி உற்பத்தி கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது. 2020-21-ம் ஆண்டில் 352.48 லட்சம் பேல்களாக இருந்த உற்பத்தி 2025-26-ம் ஆண்டில் 290.91 பேல்களாக குறைந்தது. உற்பத்தியில் ஏற்பட்ட இந்த மாறுமாட்டிற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. விவசாயிகள் மாற்றுப் பயிர்களுக்கு மாறியதால் பருத்தி சாகுபடிப் பரப்புக் குறைந்து உற்பத்தியும் சரிந்துள்ளது. 

சர்வதேச அளவில் பருத்தி விலை சுமார் 19% வரை அதிகரித்துள்ளது. தேவையைப் பூர்த்திச் செய்ய கச்சாப் பருத்தியும், பருத்தி நூலும் இறக்குமதி செய்யப்படுகிறது. ஜவுளித்தொழிலுக்கு ஆதரவளிக்கும் விதமாக 31.10.2026 வரை பருத்தி இறக்குமதி மீதான 11% வரிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது தவிர பருத்தி உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் அதன் தரத்தை மேம்படுத்தவும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நடப்பு நிதியாண்டு முதல் 2030-31-ம் நிதியாண்டு வரை 5 ஆண்டுகளுக்கு 5,659.22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கரிட்டா இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288807&reg=48&lang=1  

----

TV/PLM/GS/KR


(रिलीज़ आईडी: 2288934) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी