எஃகுத்துறை அமைச்சகம்
2026–27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் எஃகுத் துறை வளர்ச்சி வேகத்தைத் தக்கவைத்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
24 JUL 2026 1:04PM by PIB Chennai
இந்தியாவின் கச்சா எஃகு உற்பத்தித் திறன் 2026 ஜூன் நிலவரப்படி தோராயமாக ஆண்டுக்கு 222 மில்லியன் டன் என்ற அளவை எட்டியுள்ளது, 2030-க்குள் இது 300 மில்லியன் டன் என்ற தேசிய எஃகுக் கொள்கை இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது. இந்த நோக்கத்தில் பயணத்தில் பிலாய் ஸ்டீல் ஆலை, மெக்கான் உடன் ஒரு இபிசிஎம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது மேம்பட்ட பொறியியல் மற்றும் கட்டுமான மேலாண்மை நடைமுறைகள் மூலம் 7 மில்லியன் டன்னிலிருந்து 10.2 மில்லியன் டன்னுக்கு அதன் விரிவாக்கத்தை சரியான நேரத்தில் செயல்படுத்துவதை ஆதரிக்கும்.
மத்திய எஃகுத்துறை அமைச்சர் திரு. குமாரசாமி செயில் -இன் IISCO எஃகு ஆலைக்கு முக்கிய விரிவாக்கத் திட்டங்கள், உற்பத்தி வசதிகள், உள்கட்டமைப்பு, நிலைத்தன்மை முயற்சிகள் மற்றும் பணியாளர் நல நடவடிக்கைகளை ஆய்வு செய்யச் சென்றார். வருகையின் போது, அவர் 84,000 கனமீட்டர் ஆர்சிசி நீர்த்தேக்கத்தைத் திறந்து வைத்தார், இது நிலையான தொழில்துறை உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒரு முக்கியமான படியாக இருப்பதாகக் குறிப்பிட்டார், மேலும் திறன் விரிவாக்கம் மற்றும் எஃகுத் துறையை நவீனமயமாக்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்தியாவின் மிக நீளமான எஃகுத் துறை குழாய் மூலம் பொகாரோ எஃகு ஆலை ஆண்டுதோறும் சுமார் 8.3 மில்லியன் டன் இரும்புத் தாதுவைப் பெறும் என்று செயில் அறிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288774®=48&lang=1
***
TV/PKV/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2288931)
வருகையாளர் எண்ணிக்கை : 60