தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேற்குவங்கத்தில் கங்கை ஆற்றையொட்டி கொல்கத்தா முதல் கஜூபாரியா – கங்காசாகர் வரை மொபைல் நெட்வொர்க் தரம் குறித்து ட்ராய் மதிப்பீடு செய்தது

இடுகை இடப்பட்ட நாள்: 23 JUL 2026 3:20PM by PIB Chennai

மேற்குவங்கத்தில் கங்கை ஆற்றையொட்டி கொல்கத்தா முதல் கஜூபாரியா – கங்காசாகர் வரை மொபைல் நெட்வொர்க் தரம் குறித்து இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) 2026 ஜூன் மாதத்தில்  மதிப்பீடு செய்தது. தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் மொபைல் நெட்வொர்க் சேவைகளின் (குரல் மற்றும் தரவு) நிகழ்நேரத் தரம் குறித்து மதிப்பீடு செய்யவும் சரிபார்க்கவும் இச்சோதனை நடத்தப்பட்டது.

தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி நெட்வொர்க்களிலிருந்து சிம் கார்டுகளை பயன்படுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கங்கை ஆற்றையொட்டி 124.4 கிலோ மீட்டர் தொலைவிற்கும் 2 முக்கிய இடங்களிலும் 2026 ஜூன் 6 அன்று இச்சோதனை நடைபெற்றது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288275&reg=3&lang=1

 

***

(Release ID: 2288275)

SS/IR/SM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2288687) வருகையாளர் எண்ணிக்கை : 35
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali