புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வானிலை முன்னறிவிப்பு முன்கூட்டிய எச்சரிக்கைகளுக்கான நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு விளக்கம்

प्रविष्टि तिथि: 23 JUL 2026 1:30PM by PIB Chennai

மகாராஷ்டிரா உட்பட நாடு முழுவதும் புயல்கனமழை, பிற தீவிர வானிலை நிகழ்வுகளுக்கான பேரிடர் முன் எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்தபுவி அறிவியல் அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகள்தற்போது பெய்து வரும் தென்மேற்குப் பருவமழை உட்பட அனைத்துப் பருவங்களுக்கும் பொருந்தும்.

தொலைதூரப் பகுதிகளிலும் பாதிக்கக்கூடிய பகுதிகளிலும் வானிலைத் தகவல்களின் உள்ளூர் பொருத்தத்தை மேம்படுத்தவும்அதனை இறுதிநிலை வரை கொண்டு சேர்க்கவும்இந்திய வானிலை ஆய்வுத் துறைபிற அமைச்சகங்கள், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்துபுயல்கனமழை, பிற தீவிர வானிலை நிகழ்வுகளின் போது பேரிடர் தயார்நிலைக்கு ஆதரவளிக்கும் வகையில் பல  முக்கிய முன்னெடுப்புகளை மேற்கொள்கிறது.

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்துடன் இணைந்துபஞ்சாயத்து வானிலை சேவை போர்ட்டலை இந்திய வானிலை ஆய்வுத் துறை  உருவாக்கியுள்ளது. இதன் மூலம்  இ-கிராம்ஸ்வராஜ் (https://egramswaraj.gov.in), மேரி பஞ்சாயத்து செயலி இ-மஞ்சித்ராமௌசம்கிராம் (https://mausamgram.imd.gov.inஆகியவற்றில் பஞ்சாயத்து அளவிலான வானிலை முன்னறிவிப்புகளை வழங்குகிறது.

பஞ்சாயத்து உறுப்பினர்கள்வார்டு உறுப்பினர்கள்,பஞ்சாயத்து செயலாளர்கள் ஆகியோரின் செல்பேசி எண்கள்பஞ்சாயத்து வானிலை சேவை இணையதளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம்வானிலை முன்னறிவிப்புகளும் வேளாண் வானிலை ஆலோசனைகளும் வாட்ஸ்அப் வழியாக உரிய நேரத்தில் அனுப்பிஅவற்றை கிராம பஞ்சாயத்து அளவில் கூடுதலாகப் பரப்ப முடிகிறது.

புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங்இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288239&reg=3&lang=1

***

SS/SMB/SH

 


(रिलीज़ आईडी: 2288679) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी