திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பீகாரில் மகளிருக்கான திறன் பயிற்சி மையம்: மத்திய அரசுடன் ஒப்பந்தம் கையெழுத்து!

प्रविष्टि तिथि: 23 JUL 2026 6:43PM by PIB Chennai

பீகார் முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி மற்றும் மத்திய திறன் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி ஆகியோர் முன்னிலையில், பாட்னா பிஹ்டாவில் தேசிய பெண்கள் திறன் பயிற்சி மையத்தின் (என்எஸ்டிஐ) நிரந்தர வளாகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

 மேலும், பீகார் இளைஞர்களுக்கு சர்வதேச வேலைவாய்ப்புகளை உருவாக்க திறன் இந்தியா சர்வதேச மையம்' (எஸ்ஐஐசி) அமைப்பதற்காக மத்திய அரசு -பீகார் அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

 ரூ.99.97 கோடி மதிப்பில் பிஹ்டாவில் நவீன வசதிகளுடன் என்எஸ்டிஐ பெண்கள் வளாகம் அமைக்கப்படவுள்ளது. ரூ.7 கோடி முதலீட்டில் உருவாக்கப்படும் சர்வதேச மையம் மூலம் வெளிநாட்டு மொழிகள், சர்வதேசப் பணி வழிகாட்டுதல் மற்றும் பாதுகாப்பான புலம்பெயர்வுப் பயிற்சிகள் இளைஞர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288475&reg=3&lang=1

செய்தி அடையாள எண்: 2288475

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2288676) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी