சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் 2,584 இ-சேவை மையங்கள் செயல்பாட்டில் உள்ளன – நாடாளுமன்றத்தில் தகவல்!

प्रविष्टि तिथि: 23 JUL 2026 6:41PM by PIB Chennai

நாட்டின் நீதித்துறைச் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் இ-நீதிமன்றத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 25 உயர் நீதிமன்றங்களின் எல்லைக்குட்பட்டு மொத்தம் 2,584 இ-சேவை மையங்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருவதாக மத்தியச் சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

 

உச்ச நீதிமன்ற மின்-குழுவின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டுள்ள இந்த மையங்களுக்காக இதுவரை 300.22 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, மகாராஷ்டிரா 354 மையங்களுடன் முதலிடத்திலும், தமிழ்நாடு 317 மையங்களுடன் (உயர் நீதிமன்றத்தில் 7, மாவட்ட நீதிமன்றங்களில் 310) இரண்டாம் இடத்திலும் உள்ளன. உத்தரப் பிரதேசத்தில் 127 மையங்கள் இயங்கி வருகின்றன.

 

தொழில்நுட்ப அறிவு அல்லது டிஜிட்டல் வசதிகள் இல்லாத எளிய பொதுமக்கள், வழக்குதாரர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு வழிகாட்டும் மையங்களாக இவை செயல்படுகின்றன. வழக்கு ஆவணங்களை இணையவழியில் தாக்கல் செய்யும் இ-தாக்கல் சேவை, நீதிமன்றக் கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தும் வசதி, மெய்நிகர் நீதிமன்றங்கள் மற்றும் காணொலி காட்சி மூலமான விசாரணை வசதிகள் இம்மையங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. மேலும், மாவட்ட மற்றும் உயர் நீதிமன்றச் சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள் மூலம் கிடைக்கும் இலவசச் சட்ட உதவிகளுக்கான வழிகாட்டுதல்களும் இங்கு அளிக்கப்படுகின்றன. தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மூன்றாம் கட்டத் திட்டத்தின் கீழ், இம்மையங்கள் மேலும் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் கூறினார்.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288470&reg=3&lang=1

 

செய்தி அடையாள எண்:2288470

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2288664) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी