சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
ஜம்மு - காஷ்மீரில் இலவசச் சட்ட உதவித் திட்டங்களின் செயல்பாடு: நாடாளுமன்றத்தில் தகவல்!
प्रविष्टि तिथि:
23 JUL 2026 6:40PM by PIB Chennai
ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட நாடு முழுவதும் இலவச சட்ட உதவிகளை வழங்க 'திஷா 2.0' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
தொலை வழி சட்ட சேவை மூலம் ஜம்மு - காஷ்மீரில் கடந்த ஜூன் 30 வரை 7.63 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகளுக்கு இலவசச் சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், நியாய பந்து செயலி மூலம் 197 வழக்கறிஞர்கள் இலவசச் சேவையாற்றப் பதிவு செய்துள்ளனர்.
இத்திட்டத்தின்கீழ் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதுடன், 'விதி - சஞ்சீவினி' எனும் ஒருங்கிணைந்த தளம் மற்றும் 'நியாய சேது ஏஐ சாட்பாட் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 50 லட்சம் பயனாளிகளுக்குச் சட்ட உதவிகளைச் சென்றடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288469®=3&lang=1
செய்தி அடையாள எண்: 2288469
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2288658)
आगंतुक पटल : 6