அணுசக்தி அமைச்சகம்
அணுசக்தி திட்டத்தில் அடைந்துள்ள முன்னேற்றங்கள்
प्रविष्टि तिथि:
23 JUL 2026 3:57PM by PIB Chennai
வளர்ச்சியடைந்த பாரதம் தொலைநோக்குப் பார்வை மற்றும் 2070-க்குள் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்கை அடையும் நோக்கில், 2047-ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் அணுமின் உற்பத்தி திறனை எட்ட மத்திய பட்ஜெட்டில் 2025–26 'அணுசக்தி திட்டம்' அறிவிக்கப்பட்டது. மேலும், 2033-க்குள் குறைந்தது ஐந்து உள்நாட்டு சிறிய அணுஉலைகளை (எஸ்எம்ஆர்) உருவாக்கி செயல்பாட்டிற்குக் கொண்டுவரவும் இத்திட்டம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இத்திட்டத்தின் இலக்குகளை அடைவதற்காகவும், அணுசக்தித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிப்பதற்காகவும் நாடாளுமன்றத்தில் சாந்தி சட்டம் 2025 இயற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், நாட்டின் தற்போதைய அணுமின் உற்பத்தி திறனான 8.78 ஜிகாவாட்டிலிருந்து, 2031-32-க்குள் 22 ஜிகாவாட்டாகவும், 2047-க்குள் 100 ஜிகாவாட்டாகவும் உயர்த்த வரைபடம் தயார் செய்யப்பட்டுள்ளது.
பாபா அணு ஆராய்ச்சி மையம் சார்பில் 220 மெகாவாட் பாரத் சிறிய அணுஉலை பிஎஸ்எம்ஆர்-200, 55 மெகாவாட் சிறிய அணுஉலை எஸ்எம்ஆர்-55 மற்றும் ஹைட்ரஜன் உற்பத்திக்கான 5 மெகாவாட் உயர் வெப்பநிலை வாயு குளிரூட்டப்பட்ட அணுஉலை ஹெச்டிஜிசிஆர் ஆகிய மூன்று சிறிய அணுஉலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
பிஎஸ்எம்ஆர்-200 மற்றும் எஸ்எம்ஆர்-55 ஆகிய அணுஉலைகளை மகாராஷ்டிராவின் தாராபூரில் அமைக்க அணுசக்தி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல், ஹெச்டிஜிசிஆர் அணுஉலையை விசாகப்பட்டினத்தில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மைய வளாகத்தில் அமைக்க நிலத்தேர்வு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இத்தகவலை பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.
****
TV/EA/SH
(रिलीज़ आईडी: 2288657)
आगंतुक पटल : 10