வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் நேர்மறையான தாக்கம்
प्रविष्टि तिथि:
23 JUL 2026 7:17PM by PIB Chennai
பிரதமரின் ஸ்வநிதி திட்டம் ஆரம்பத்தில் நகர்ப்புறங்களில் மட்டும் செயல்படுத்தப்பட்டது. பின்னர் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகளுக்குள் வியாபாரம் செய்யும், சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த சாலையோர வியாபாரிகளுக்கும் நீட்டிக்கப்பட்டது. மறுசீரமைக்கப்பட்ட பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ், இத்திட்டத்தின் வரம்பு சட்டப்பூர்வ நகர்ப்புறங்களுக்கு அப்பால், புறநகர்ப் பகுதிகள் போன்றவற்றை உள்ளடக்கி படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பிரதமரின் ஸ்வநிதி திட்டம் தொடர்பாக, ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் நிறுவனத்தால் 2023, 2025-ம் ஆண்டுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 2023-ம் ஆண்டு ஆய்வானது, நாடு முழுவதும் உள்ள 100 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 5,000-க்கும் மேற்பட்ட பயனாளிகளை உள்ளடக்கி நடத்தப்பட்டது. இதில், 95% பயனாளிகளுக்கு ஸ்வநிதி திட்டமே வங்கியிலிருந்து பெறப்பட்ட முதல் கடன் என்றும், அந்தக் கடன் அவர்களின் வணிகத்தை விரிவுபடுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்றும் கண்டறியப்பட்டது. 2025-ம் ஆண்டு ஆய்வானது, நாடு முழுவதும் உள்ள 99 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 5,000-க்கும் மேற்பட்ட பயனாளிகளை உள்ளடக்கி நடத்தப்பட்டது. இதில், ஸ்வநிதி கடன் பெற்றவர்களின் சராசரி ஆண்டு வணிக வருமானம் சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கண்டறியப்பட்டது.
இந்தத் திட்டத்தின் தாக்கம் வணிகத்துக்கு அப்பாற்பட்டது என்றும் அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. கடன் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, குடும்பங்களின் பணப்புழக்கத்தை நிலைப்படுத்துவதன் மூலம், இத்திட்டம் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும், உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், சுகாதாரப் பராமரிப்புக்கான அணுகலை அதிகரிக்கவும், குழந்தைகளின் கல்விக்கு ஆதரவளிக்கவும் வழிவகுத்துள்ளது.
வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு டோகன் சாஹு, மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288503®=3&lang=1
(Release ID : 2288503)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2288650)
आगंतुक पटल : 6