வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
தொழில் வழித்தட மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில், என்ஐசிடிசி அமைப்பு ஆரிக் ஸ்மார்ட் சிட்டிக்கு பரஸ்பர கற்றல் களப் பயணத்துக்கு ஏற்பாடு
இடுகை இடப்பட்ட நாள்:
23 JUL 2026 7:09PM by PIB Chennai
தேசிய தொழில்துறை வழித்தட மேம்பாட்டுக் கழகமாக என்ஐசிடிசி (NICDC), மகாராஷ்டிரா தொழில்துறை நகரமைப்பு லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து, மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள சேந்திரா-பிட்கின் தொழிற்பேட்டைக்கு (ஆரிக் ஸ்மார்ட் சிட்டி) 23 ஜூலை 2026 அன்று இரண்டு நாள் பரஸ்பர கற்றல் களப்பயணத்தைத் தொடங்கியது.
இந்தத் திட்டம், அறிவுப் பரிமாற்றத்தை எளிதாக்கவும், நிறுவனத் திறன்களை வலுப்படுத்தவும், பசுமைவெளித் தொழில்துறை பொலிவுறு (ஸ்மார்ட்) நகரங்களின் திட்டமிடல், செயலாக்கம், செயல்பாடு ஆகியவற்றில் சிறந்த நடைமுறைகளை வெளிப்படுத்தவும், மூத்த அதிகாரிகளை ஒன்றிணைத்துள்ளது.
பங்கேற்பாளர்களிடையே உரையாற்றிய என்ஐசிடிசி-யின் தலைமைச் செயல் அதிகாரி திரு. ரஜத் குமார் சைனி, தேசிய தொழில் வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த தொழில் நகர மேம்பாட்டிற்கான ஒரு முன்மாதிரியாக ஆரிக் (AURIC) உருவெடுத்துள்ளது என்பதை எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியின் முதல் நாள், பங்கேற்பாளர்களுக்கு ஆரிக்-கின் திட்டமிடல் அணுகுமுறையை காணும் வாய்ப்பு ஏற்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288498®=3&lang=1
(Release ID : 2288498)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2288633)
வருகையாளர் எண்ணிக்கை : 38