விண்வெளித்துறை
ஆதித்யா-எல்1 திட்டத்தின் சாதனைகள்
प्रविष्टि तिथि:
23 JUL 2026 4:02PM by PIB Chennai
சூரியக் காற்றுத் துகள்கள், சூரிய ஒளிவட்டம், சூரிய வட்டில் உள்ள புற ஊதாக் கதிர்களின் தடயங்கள், அத்துடன் சூரியக் காந்தப்புலங்கள் (கோள்களுக்கிடையேயான காந்தப்புலம் ) ஆகியவற்றை ஆய்வு செய்வதே ஆதித்யா-எல் 1-ன் அறிவியல் நோக்கங்களாகும். சூரியன்-பூமி எல் 1 புள்ளியைச் சுற்றி ஆதித்யா-எல் 1 விண்கலம் நிலை கொண்டிருப்பதால் சூரியனைத் தொடர்ச்சியாகக் காணும் வசதி கிடைக்கிறது. இது அதனை ஒரு பிரத்யேக சூரிய இயற்பியல் ஆய்வகமாக மாற்றுகிறது.
ஆதித்யா-எல்1 ஒரு சூரிய இயற்பியல் திட்டமாகும், மேலும் இது விண்வெளி வானிலை திட்ட வகையின் கீழ் வராது. இருப்பினும், ஆதித்யா-எல்1 மூலம் கிடைக்கும் தரவுகள், சூரிய சுழற்சியின் வெவ்வேறு கட்டங்களில் சூரியனின் செயல்பாட்டைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.
ஆதித்யா-எல்1 கண்காணிப்புகளைத் தரைவழி கண்காணிப்புகளுடன் இணைப்பதன் மூலம், விஞ்ஞானிகள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்கிறார்கள், இது இறுதியில் விண்வெளி வானிலையின் தாக்கங்களைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
ஆதித்யா-எல்1 திட்டத்திலிருந்து பெறப்பட்ட அனுபவம், விண்வெளி வானிலையைக் கணிப்பதற்காக விண்வெளி சார்ந்த அமைப்புகளைக் கட்டமைக்கும் பணிகளில் முன்னேறிச் செல்லப் பயனுள்ளதாக இருக்கும்.
ஆதித்யா-எல்1, சந்திரயான்-3 ஆகியவற்றின் வெற்றி, இந்தியாவின் விண்வெளித் திட்டத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதன் மூலம், இந்தியா முதன்மையான, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் விண்வெளி அறிவியல் தரவுகளை உருவாக்கும் ஒரு முக்கிய நாடாக உருவெடுத்துள்ளது.
பிரதமர் அலுவலகம், பணியாளர்நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288304®=3&lang=1
****
TV/SMB/SH
(रिलीज़ आईडी: 2288628)
आगंतुक पटल : 8