சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒடிசாவில் நீதிமன்றங்கள் டிஜிட்டல் மயமாக்கல்

प्रविष्टि तिथि: 23 JUL 2026 6:44PM by PIB Chennai

நீதித்துறையில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை வலுப்படுத்தும் நோக்கத்துடன், இ-நீதிமன்றங்கள் திட்டப்பணி நாடு முழுவதும் கட்டம் கட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  உச்ச நீதிமன்றத்தின் தொழில்நுட்ப குழுவுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் நீதித்துறையானது, அந்தந்த உயர் நீதிமன்றங்கள் மூலம் இந்த இ-நீதிமன்றங்கள் திட்டத்தை  செயல்படுத்தி வருகிறது.

 

ஒடிசா மாநிலத்தில், ஒடிசா உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் கீழ் அனைத்து மாவட்ட, கீழ்நிலை நீதிமன்றங்களிலும் மின்-நீதிமன்றங்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

ஒடிசாவல் அனைத்து நீதிமன்றங்களிலும் இ-ஃபைலிங் 3.0 மென்பொருள் செயல்படுத்தப்பட்டு, 30.06.2026 வரை 1.31 லட்சம் வழக்குகள் மின்னணு முறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் காணொலிக் கலந்துரையாடல் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு, 30.06.2026 வரை 7.61 லட்சம் காணொலி விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. கூடுதலாக, தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு நீதி கிடைப்பதை மேம்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் 184 இ- சட்ட சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

இந்தத் தகவலை மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

 மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288474&reg=3&lang=1

(Release ID : 2288474)

****

TV/PLM/SH

 


(रिलीज़ आईडी: 2288623) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी